குடும்ப ஒற்றுமைக்கு காகத்திற்கு காலையில் வைக்க வேண்டியவை
தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு காகத்திற்கு உங்கள் கையால் இதை மட்டும் வையுங்கள் போதும். உங்கள் குடும்பம் ஓஹோ என ஒற்றுமையாக, சந்தோஷமாக வாழும்.
காகத்திற்கு தினமும் காலையில் எந்த ஒரு பொருளை எப்படி வைக்க வேண்டும், எந்த பொருட்களை எல்லாம் காகத்திற்கு வைக்கக் கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.
குடும்ப ஒற்றுமைக்கு காகத்திற்கு காலையில் வைக்க வேண்டிய உணவு
காகத்திற்கு எப்போது வேண்டுமென்றாலும் உணவு வைக்கலாம். தவறே கிடையாது. இருந்தாலும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, சாமி கும்பிட்டு விட்டு, இரண்டே இரண்டு பிஸ்கட்டுகளை காகத்திற்கு வைத்துவிட்டு, உடைத்து சின்ன சின்ன துண்டுகளாக வைத்துவிட்டு, சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் வைத்து விடுங்கள். இதை தினமும் உங்கள் பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் கொடுத்த பிஸ்கட்டை காகம் வந்து எடுத்துச் செல்லும்.
காலை பசியோடு இருக்கும் அந்த காகத்திற்கு நீங்கள் உணவு வைப்பது எவ்வளவு சிறப்பு தெரியுமா. அந்த காகம் தன்னுடைய குஞ்சுகளை ஏதாவது ஒரு மரத்தின், கூட்டில் வைத்துவிட்டு இறை தேட வந்திருக்கும். அப்போது நீங்கள் வைக்கும் பிஸ்கட்டை கொண்டு போய் அந்த குஞ்சுகளுக்கு கொடுக்கும். பசியோடு இருக்கும் தன் பிள்ளைக்கு சாப்பாடு கொடுத்த உங்களை அப்போது அந்த காகம் எவ்வளவு தூரம் வாழ்த்தும் என்று நீங்கள் யோசித்துப் பாருங்கள்.
உதாரணத்திற்கு நம்முடைய பிள்ளை பசியாக இருக்கிறது. அந்த நேரம் நம்முடைய வீட்டில் சாப்பிடுவதற்கு உணவு இல்லை. அப்போது யாராவது சாப்பாடு கொண்டு வந்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்தால் உங்களுடைய மனது எவ்வளவு குளிரும். அதேபோல் தான் காகத்திற்கும் உணர்வு இருக்கிறது. பெரிய பெரிய அளவில் செலவு செய்து அன்னதானம் செய்ய முடியாதவர்கள் கூட காலையில் இந்த ஒரு நல்லதை செய்தால் போதும் குடும்பம் சுபிட்சம் பெறும்.
Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
12 Jul 2023 | Wed | 11:07:40 AM IST