மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது .மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.

  • மதத்தலைவர்
  • வழக்கறிஞர்
  • இயற்பியலாளர்

முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. ‘கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா? என் வினவப்பட்டது.

ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான் என்றார்.

மேடை இழுக்கப்பட்டது, மதத்தலைவரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! ஆண்டவன் அவரை காப்பாற்றிவிட்டான். என்றனர். மதத்தலைவர் தப்பிவிட்டார்.

அடுத்ததாக வழக்கறிஞர் அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. ‘கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா? என வினவப்பட்டது.

‘நீதி! நீதி! நீதியே வெல்லும்’ என்றார்.

மேடை இழுக்கப்பட்டது, வழக்கறிஞரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! நீதி அவரை காப்பாற்றிவிட்டது. என்றனர். வழக்கறிஞர் தப்பிவிட்டார்.

அடுத்ததாக இயற்பியலாளர் அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. ‘கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா? என வினவப்பட்டது.

எனக்கு ஆண்டவன் பற்றியும் தெரியாது, நீதி பற்றியும் தெரியாது. ஆனால் அங்கே தூக்கு மேடை கயிற்றில் ஒரு முடிச்சு இருக்கிறது. அதனால்தான் கயிறு கழுத்தை பதம் பார்க்கவில்லை என்பது எனக்குத் தெரியும்’ என்றார்.

உடனே தூக்குமேடையை பரிசீலித்தனர். அங்கே அந்த கோளாறு இருந்தது. அதனை சரி செய்தனர். பின்னர் இயற்பியலாளர் தூக்கில் ஏற்றப்பட்டு தலையும் துண்டிக்கப்பட்டது.

#நீதி

👉 சில சந்தர்ப்பங்களில் வாய் மூடி இருக்க பழகிக்கொள்!

👉 தெரிந்த உண்மைகளையெல்லாம் உளறிக்கொட்டுவதால் உன் கழுத்துக்கே ஆபத்தாகலாம்!

சிலவேளை முட்டாளாக இருப்பதுதான் புத்திசாலித்தனமானது!!!

Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
21 Sep 2021 | Tue | 10:34:34 AM IST