சடாரி
சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருவடி பொறிக்கப்பெற்ற க்ரீடமாகும்!
அறியாத ஜீவன் ஆவலுற்றுத் தவிக்கும் போது - ஆசார்யனே அவ்விடத்தில் எழுந்தருளி - எம்பெருமானின் திருவடிகளை நம்மிடம் சேர்ப்பித்து நம்மை உய்வித்து அருள்கிறார்! அதுவே பெருமாள் சன்னதிகளில் நம் சிரசில் சாதிக்கும் சடாரியின் தாத்பர்யம்!
கர்பத்தினுள் ஊறிக்கிடக்கும் குழந்தையை, நிறை மாதத்தில் - உலக மாயைக்குள் ஆட்படும்படி உந்தித் தள்ளும் வாயு சடம் எனப்படும்!
குழந்தைகள் அனைத்தும் இந்த சடத்தினால் உந்தப்பட்டு ஜனிக்க, ஒரு குழந்தை மட்டும் சடம் எனும் இந்த வாயுக்கு ஆட்படாமல், அதனை வென்று வந்தது!
அந்த குழந்தை நம்மாழ்வார்! அஞ்ஞானம் எனும் சட வாயுவினை வென்றதால் சடகோபன்!
அஞ்ஞானத்தை அழித்து ஞானம் அருளும் சடாரியின் பெயரும் சடகோபம்!
வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் நம்மாழ்வார் தான் ஆதிகுரு! அவர்தான் “சடாரி” ஆழ்வாரே எம்பெருமானின் திருவடிகளாகி - சடாரியாக இருந்து அவன் திருவடிகளை நம்மிடம் சேர்ப்பித்து நம்மை உய்விக்கிறார்
Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
12 Jul 2023 | Wed | 11:09:04 AM IST