பெருமாள் கோவிலில் உட்கார கூடாது, சிவன் கோயிலில் உட்காராமல் வர கூடாது என்று சொல்வது எதனால்?

பெருமாள் கோவிலில் நாம் உட்கார்ந்தால் தாயாரும் அங்கேயே உட்கார்ந்து விடுவார்களாம். நம்ம கூட லஷ்மி வந்தால் நல்லது தானே அதனால உட்காராமல் வர வேண்டும்! மேலும் ஒரு கூடுதல் தகவல். பெருமாள் கோவிலில் தெரியாமல் உக்கார்ந்து விட்டாலும் , எழுந்து வீட்டுக்கு வரும் பொழுது , “லக்ஷ்மி தாயே, நீயும் என் கூட வா!” என்று சொல்லலாம். இது என் தாய் எனக்குச் சொல்லித் தந்தது !!

சிவன் கோவிலில் நவகிரகங்களை சுற்றுவதால் அங்கே உட்காராமல் வந்தால் நவக்கிரகங்கள் மற்றும் பூத கணங்கள் பக்தர்களின் கூடவே வருவதால் தான் உட்கார்ந்து விட்டு வர வேண்டுமாம்!

Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
01 Sep 2021 | Wed | 06:44:48 AM IST