பதினான்குஉலகங்கள் என்ன தெரியுமா ?

பூமிக்கு மேலே 7 உலகமும், பூமிக்கு கீழே அதாவது பாதாளத்தில் 7 உலகமும் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன..!!!

அந்த 14 உலகங்களின் பெயர்கள் மற்றும் அதில் யார் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் உங்களுக்கு தெரியுமா..,?? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பூமிக்கு மேலே உள்ள 7 உலகங்கள்:-

  1. சத்தியலோகம் - பிரம்மன்

  2. தபோலோகம் - தேவதைகள்

  3. ஜனோலோகம் - பித்ருக்கள்

  4. சொர்க்கம் - இந்திரன் மற்றும் தேவர்கள்

  5. மஹர லோகம் - முனிவர்கள்

  6. புனர் லோகம் - கிரகங்கள், நட்சத்திர தேவதைகள்

  7. பூலோகம் - மனிதர்கள், விலங்குகள் (ஒன்று முதல் ஆறு அறிவு படைத்த உயிரினங்கள்)

பூமிக்கு உள்ளே / கீழே பாதாளத்தில் 7 லோகங்கள் உண்டு. அவை வருமாறு:-

  1. அதல லோகம்

  2. விதல லோகம் - அரக்கர்கள்

  3. சுதல லோகம் - அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி

  4. தலாதல லோகம் - மாயாவிகள்

  5. மகாதல லோகம் - புகழ்பெற்ற அசுரர்கள்

  6. பாதாள லோகம் - வாசுகி முதலான பாம்புகள்

  7. ரஸாதல லோகம் - அசுர ஆசான்கள்

Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
09 Jul 2023 | Sun | 12:07:09 PM IST