காளிங்க நர்த்தன தத்துவம் !!!

ஸ்ரீராமஜெயம்!

கிருஷ்ணரின் லீலைகள் சொல்லில் அடங்காதது. அவரது லீலைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கும்.

அவர் செய்த லீலைகளில் ஒன்றுதான், யமுனை நதியில் வசித்த ஐந்து தலை நாகமான காளிங்கனை அடக்கி, அதன் தலையில் நர்த்தனம் புரிந்தது.

LordKrishna Kaalinga Narthanam

யமுனை நதியில் வசித்து வந்த காளிங்கனின் விஷ மூச்சுக் காற்றால், யமுனை நதியும், அதன் கரையில் இருந்த சோலைகளும் நஞ்சாகிப் போயின.

இதனால் காளிங்கனை அங்கிருந்து கடலுக்கு செல்ல, கிருஷ்ணர் பணித்தார். அவன் மறுத்ததால் அவனை அடக்கி, அவனது தலையில் நர்த்தனம் புரிந்தார்.

இந்த காளிங்க நர்த்தன தத்துவத்துக்குள் சிறைப்பட்டிருக்கும் ஆழ்ந்த கருத்தை பக்தர்களாகிய நாம் உணர வேண்டும்.

அழைத்த குரலுக்கு தன் பக்தரின் குறை தீர்த்த வண்ணம் அருள்வதில் என்றும் துணை நிற்பவர் பகவான் கிருஷ்ணன்.

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்று அவன் பொற்பாதங்களை பற்றி சரணடைந்தால் வாழ்வில் என்றும் குறைவின்றி நிறைவாக்குவான் பகவான் கிருஷ்ணன்.

மனித மனம் என்பது தான் பாம்பு. மனிதனின் ஐம்புலன்களும், பாம்பின் ஐந்து தலைகள்.

எனவே ஐம்புலன்களின் வழியாகத்தான் மனம் என்ற பாம்பு, நஞ்சினை (தீமைகளை) கக்குகிறது.

நாம் ஐம்புலன்களை அடக்கி ஒடுக்கி, பிறருக்கு தீமை செய்யாதவாறு ஆள வேண்டும் என்பது தான் இந்த காளிங்க நர்த்தனத்தின் உயர்ந்த தத்துவமாகும்.🌹

Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
03 Oct 2023 | Tue | 19:41:24 PM IST