“ஐஸ்வர்யம்” என்றால் பணக்கட்டுகளோ லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்ல!

வீட்டு வாசலில், பெண்பிள்ளையின் கொலுசு ஒலி ஐஸ்வர்யம்!

வீட்டிற்கு வந்தவுடன், சிரிப்போடு எதிரில் வரும் மனைவி ஐஸ்வர்யம்!

எவ்வளவு வளர்ந்தாலும், அப்பா திட்டும் திட்டு ஐஸ்வர்யம்!

அம்மா கையால் உணவு ஐஸ்வர்யம்!

மனைவி பார்க்கும் ஓரக் கண் பார்வை ஐஸ்வர்யம்!

பசுமையான மரங்கள், பயிர் நிலங்கள் ஐஸ்வர்யம்!

இளஞ்சூடு சூரியன் ஐஸ்வர்யம்!

பவுர்ணமி தினத்தில் சந்திரன் ஐஸ்வர்யம்!

உலகில் நம்மை தழுவிக்கொண்டிருக்கும் இந்த பஞ்ச பூதங்கள் ஐஸ்வர்யம்!

பால் வடியும் குழந்தையின் சிரிப்பு ஐஸ்வர்யம்!

இயற்கை அழகு ஐஸ்வர்யம்!

உதடுகளால் சிரிக்கும் உண்மையான சிரிப்பு ஐஸ்வர்யம்!

அவசரத்தில் உதவும் நண்பன் ஐஸ்வர்யம்!

புத்தியுள்ள குழந்தைகள் ஐஸ்வர்யம்!

குழந்தைகள் படிக்கும் படிப்பு ஐஸ்வர்யம்!

குலதெய்வம் கொடுத்த உடல் ஆரோக்கியம் ஐஸ்வர்யம்!

ஒருவருக்காவது உதவி செய்யும் மனசு ஐஸ்வர்யம்!

ஐஸ்வர்யம் என்றால் கையில் எண்ணும் பணக்கட்டு அல்ல !

கண்ணால் பார்க்கும் உலகம் ஐஸ்வர்யம்!

மனசு அடையும் சந்தோஷம் ஐஸ்வர்யம்..!

நம்மை சுற்றி நல்ல நண்பர்கள் இருந்தால் ஐஸ்வர்யமோ ஐஸ்வர்யம் தான்… 🙏🙏🙏

Note: This was a forward message on WhatsApp

Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
14 Nov 2023 | Tue | 09:29:14 AM IST